இளங்கோபுரத்தில் வாள்வெட்டு குடும்பஸ்தர் படுகாயம்!

இளங்கோபுரத்தில் வாள்வெட்டு குடும்பஸ்தர் படுகாயம்!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட இளங்கோபுரம் பகுதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம நிலையில் யாழ்போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


40 அகவையுடைய குடும்பஸ்தரான க.காந்தராஜ் என்ற குடும்பஸ்தால் வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.

இன்று காலை குறித்த கிராமத்தில் ஒன்று கூடிய மக்கள் வாள்வெட்டு குழு தொடர்பில் பொலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சட்டவிரோத செயற்பாடுகளால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தவர் மீதே வாள்வெட்டு தாக்கதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.


இத குறித்து புதுக்குடியிருப்பு பொலீசாரிடம் கோட்டபோது வாள்வெட்டு குழு தொடர்பில் இன்று மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள