“இளவரசர் ஹரி கன்னித்தன்மையை இழந்தது என்னிடம் தான்” – 40 வயது பெண் அதிரடி!

You are currently viewing “இளவரசர் ஹரி கன்னித்தன்மையை இழந்தது என்னிடம் தான்” – 40 வயது பெண் அதிரடி!

பிரித்தானிய இளவரசர் ஹரி தன்னிடம் தான் கன்னித்தன்மையை முதலில் இழந்தார் என 40 வயது பெண்மணி தெரிவித்துள்ளார். ஹரியின் நினைவுக் குறிப்பு புத்தகமான ‘Spare’-யில் குறிப்பிட்ட மூத்த பெண் யார் என்பது கேள்வியாக இருந்தது. அதாவது அவர் இளம் வயதில் உறவுகொண்ட பெண் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் 40 வயதான சாஷா வால்போல் என்ற பெண் தான் ஹரியுடன் உறவுகொண்டது என அவரே தெரிவித்துள்ளார்.

Norton-யில் கடந்த 2001ஆம் ஆண்டு நடந்த அந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார். ஹரியுடன் நெருங்கிய தோழியாக இருந்ததால் இருவரும் சிகரெட்டை புகைப்பதற்காக பக்கத்து வயல்வெளிக்குள் சென்றுள்ளனர்.

அங்கு இருவரும் உறவு கொண்டுள்ளனர். அந்த சமயம் அவர் இளவரசர் இல்லை, தனது நண்பர் ஹரி என அவர் நினைத்ததாக கூறுகிறார். மேலும் தொடர்ந்த அப்பெண், ‘நான் இளவரசர் ஹரியுடன் உடலுறவு கொண்டேன் என்று நினைக்கவில்லை, அது கடவுளே நான் ஹரியுடன் உறங்கிவிட்டேன் என்பதாகும்’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹரி முதன் முதலில் கன்னித்தன்மையை இழந்தது தன்னிடம் தான் என அவர் குறிப்பிட்டார். தற்போது Digger வாகனத்தை இயக்குவதன் மூலமாக சாஷா பணம் ஈட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments