இளவாலையில் இளைஞரின் சடலம் மீட்பு!! – விசாரணைகள் தீவிரம்!!

You are currently viewing இளவாலையில் இளைஞரின் சடலம் மீட்பு!! – விசாரணைகள் தீவிரம்!!

இளவாலையில் இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இளவாலைச் சந்தியில் உள்ள காணி ஒன்றின் கிணற்றில் இருந்தே இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிளரின் கொல்வின் என்ற 32 வயது இளைஞரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் நேற்று சிலருடன் இணைந்து விருந்து ஒன்றில் கலந்துகொண்டார் என்று கூறப்படுகின்றது.

தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த காவல்த்துறையினர், விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்கள் தெரியவரும் என்று தெரிவித்தனர்.

இதேவேளை

மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் குடும்பஸ்தர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26) காலை 11 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் காவல்த்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றது என்று பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதே வேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments