இளைஞனுக்கு எமனான ஹெரோயின்- யாழ்ப்பாணத்தில் இரண்டாவது சம்பவம்!

You are currently viewing இளைஞனுக்கு எமனான ஹெரோயின்- யாழ்ப்பாணத்தில் இரண்டாவது சம்பவம்!

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக் கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 28 வயதுடய இளைஞரே நேற்று முற்பகல் வீட்டில் உயிரிழந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த இளைஞர், போதைப்பொருளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக அடியாக இருந்து வந்துள்ளார். அதனால் வீட்டில் பணம் கேட்பது மற்றும் திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்ப பெற்றோர் முயற்சித்துள்ளனர்.

நேற்று காலையில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு விட்டு வீட்டுக்கு வந்த இளைஞர் நெஞ்சைப் பொத்தியவாறு நிலத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரின் உயிரிழப்பு அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டமையினால் ஏற்பட்டது என்று உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட தெல்லிப்பழை கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த 4ஆம் திகதி உயிரிழந்தார். இந்த நிலையில் 2 வாரங்களில் மற்றொரு இளைஞனும் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதனால் உயிரிழந்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments