இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரிற்கு பதவி உயர்வு!

இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரிற்கு பதவி உயர்வு!

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சிறிலங்கா  கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீகேபி தசநாயக்கவிற்கு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தசநாயக்க ரியர் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.  முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் இவருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டுதடுத்துவைக்கப்பட்டிருந்த இவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

 2008 முதல் 2009 ஆண்டு வரையிலான காலப்பகுதியில்  கொழும்பி;ல்  காணாமல் போன 11 இளைஞர்கள் தொடர்பிலேயே இவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments