இஷாலினியின் உயிரிழப்புக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம்!

You are currently viewing இஷாலினியின் உயிரிழப்புக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம்!

இஷாலினி எனும் சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கோரி கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் பாரதிபுரம் சூசைபிள்ளை கடை சந்தியில் இடம்பெற்றது.

பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் ஆகய கிராம மட்ட பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

“பள்ளி செல்ல வேண்டிய ஒரு பாலகியை உன் வீட்டில் வேலைக்கு வைத்துவிட்டு நல்லாட்சி செய்தாயோ?”

“அரசே சிறுமியின் சாவுக்கு தீர்வு எங்கே?”

“யாராக இருந்தாலும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்”

“பெண் அடிமையின் உச்சம் ஒரு பாலகியின் மரணம்”

உள்ளிட்ட கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் ஏந்தி சுமார் 3O நிமிடங்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான ரிஷாத் பதியுதீனுடைய மனைவி , மனைவியின் தந்தை மற்றும் தரகர் ஆகியோரையும் பிரிதொரு பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீனுடைய மனைவியின் சகோதரரையும் இன்று சனிக்கிழமை காலை கொழும்பு – புதுக்கடை இலக்கம் – 2 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபர்களான, ரிஷாத் பதியுதீனுடைய மனைவி , மனைவியின் தந்தை, மைத்துனர் மற்றும் தரகர் ஆகியோரை, 48 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தி,  எதிர்வரும் 26ஆம் திகதி  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிவான் சிறீலங்கா காவல்த்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments