ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று!

You are currently viewing ஈரானில்  கடந்த 24 மணி நேரத்தில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று!

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 2,102 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2,102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,16,635 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளதால், கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்னிக்கை 6,902 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 91,836 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 6,58,604 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள