ஈரானில் பலி எண்ணிக்கை 1800 ஐ தாண்டியுள்ளது : கொரோனா கொடூரம்!

You are currently viewing ஈரானில் பலி எண்ணிக்கை 1800 ஐ தாண்டியுள்ளது : கொரோனா கொடூரம்!

ஞாயிறு முதல் 127 புதிய இறப்புக்கள் பதிவாகியுள்ள நிலையில், ஈரானில் இப்பொழுது 1,812 கொரோனா வைரஸ் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரானிய ஜனாதிபதி Hassan Rouhani இன்று திங்களன்று கூறுகையில்,
“தொற்றை தடுப்பதற்கான போராட்டத்தில் அமெரிக்கா ஈரானுக்கு உதவ விரும்பினால், அவர்கள் ஈரானின் பொருளாதாரத் தடைகளை தளர்த்த வேண்டும். ஆனால், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைத் தடுக்கும் பொருளாதாரத் தடைகளை அவர்கள் தளர்த்தமாட்டார்கள் என்றும் மேலும், ஈரானின் பொருளாதாரத்தை தொடர்ந்து தனிமைப்படுத்துவார்கள் என்றும் அமெரிக்கா பதிலளித்துள்ளது” என்று கூறியுள்ளார் என Reuters எழுதியுள்ளது .

பகிர்ந்துகொள்ள