ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரைனிய விமானத்தை தாமே சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புதல்! ஈரானிய விமானப்படைத்தளபதி பகிரங்க மன்னிப்பு கோரினார்!!

ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரைனிய விமானத்தை தாமே சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஒப்புதல்! ஈரானிய விமானப்படைத்தளபதி பகிரங்க மன்னிப்பு கோரினார்!!

ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரைனிய விமானம், ஈரானிய ஏவுகணைகளாலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க கூட்டுப்படைத்தளங்கள்மீதான தாக்குதலின்போது, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளால் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், ஈரான் அதை மறுத்திருந்தது. எனினும், ஏவுகணையொன்று விமானத்தை தாக்கும் காணொளி வெளியிடப்பட்டதன் பின், இப்போது ஈரான் இதை ஒத்துக்கொண்டுள்ளது.

பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 176 உயிர்கள் பலியாகியிருந்தன. பலியானவர்களில், சுவீடன், கனடா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடந்த சம்பவத்துக்கு தாமே முழுப்பொறுப்பையும் எடுத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கும் ஈரானிய விமானப்படைத்தளபதி, “Amir Ali Hajizadeh” நடந்த சம்பவத்துக்காக தான் மிகவும் வருந்துவதாகவும், மனிதத்தவறே இதற்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளார். எனினும், இத்துயரமான சம்பவத்துக்கு அமெரிக்காவும் தார்மீக பொறுப்பு ஏற்கவேண்டும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஈரானிய அதிபர் இதுவிடயம் தொடர்பில் கருத்து தெரிவித்தபோது, நடந்த சம்பவம் மன்னிக்க முடியாதது எனவும், இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவார்களென தெரிவித்துள்ளார்.

இதே வேளை, குறித்த விமானத்தை சுட்டுவீழ்த்தும் முடிவை, ஈரானிய விமானப்படையைச்சேர்ந்த சாதாரண படைவீரர் ஒருவரே தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும், மேலதிகாரிகள் எவரிடமிருந்தும் விமானத்தை சுட்டுவீழ்த்துவதற்கான அனுமதியை அவர் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவிடயம் தொடர்பான ஒளிவுமறைவில்லாத உண்மைகளை பகிரங்கப்படுத்துமாறு ஈரானிய அதியுயர் மதத்தலைவரான “அயத்தொல்லா அலி கமெய்னி” வழங்கிய உத்தரவின் பின்னரே, ஈரானின் பகிரங்க ஒப்புதல் வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நடந்த சம்பவத்துக்கு பொதுமன்னிப்பை ஈரான் கோருவதோடு, விமான விபத்திற்கான இழப்பீடையும் ஈரான் வழங்கவேண்டுமென, உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments