ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க பாராளுமன்​றத்​தில் தீர்மானம் !

You are currently viewing ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க பாராளுமன்​றத்​தில் தீர்மானம் !

ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க பாராளுமன்​றத்​தில் தீர்மானம் நிறைவேற்​றப்​பட்டுள்​ளது.

பல்​வேறு கட்ட பேச்​சு​வார்த்​தைகளுக்​குப் பிறகு கடந்த ஏப்​ரல் 8ஆம் திகதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. எனினும் தற்​காப்பு தாக்​குதல் என்ற பெயரில் அமெரிக்கா​வும் ஈரானும் அவ்வப்போது போர் நிறுத்​தத்தை மீறி வரு​கின்​றன.

இந்த சூழலில் ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்கா பாராளுமன்றத்தின் பிரதி​நி​தி​கள் அவை​யில் ஐனநாயக கட்சி சார்​பில் தீர்மானம் கொண்டு வரப்​பட்​டது. இந்த தீர்​மானத்​தின் மீது நேற்று முன்தினம் வாக்​கெடுப்பு நடத்தப்​பட்​டது.

ஆதர​வாக 215 எம்.​பிக்​களும், எதி​ராக 208 எம்.பிக்​களும் வாக்களித்​தனர். பெரும்​பான்மை எம்.பிக்களின் ஆதர​வால் தீர்​மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்​பாக ஆளும் குடியரசு கட்​சியை சேர்ந்த 4 எம்​.பிக்​கள் தீர்​மானத்​துக்கு ஆதரவாக வாக்​களித்துள்ளனர்.

இந்த தீர்​மானத்​தின் மீது செனட் அவை​யில் விரை​வில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மொத்​த​முள்ள 100 எம்​.பிக்களில் ஆளும் குடியரசு கட்சிக்கு 53 எம்.​பிக்​கள் உள்​ளனர். ஜனநாயக கட்​சிக்கு 45 எம்.​பிக்​கள் மட்டுமே உள்​ளனர். பிரதிநிதிகள் அவை போன்று செனட் அவை​யிலும் ஆளும் குடியரசு கட்​சியை சேர்ந்த சில எம்.​பிக்​கள் தீர்​மானத்​துக்கு ஆதரவு அளிக்​கக்​கூடும் என்று கூறப்​படு​கின்றது.

ஒரு​வேளை செனட் அவை​யில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டாலும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சிறப்பு அதி​காரத்தைப் பயன்படுத்தி தீர்​மானத்தை இரத்து செய்ய முடி​யும். இந்த சூழலில் ஜனாதிபதி ட்ரம்ப் நிருபர்​களிடம் கூறும்​போது, “அமெரிக்​கா, ஈரான் இடையி​லான பேச்​சு​வார்த்தை தொடர்ந்து நடை​பெற்று வருகின்றது. விரைவில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்” என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply