சுவிஸ் தூதுவர்கள் இருவர் ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சுவிட்சர்லாந்தின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் ஈரானில் இரண்டு சுவிஸ் தூதுவர்கள் மற்றும் ஒரு சுற்றுலாப்பயணி ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஈரானுக்கான சுவிஸ் துணைத் தூதர் சில்வி ப்ரனர்(Sylvie Brunner) தாம் தங்கியிருந்த குடியிருப்பின் 17ஆவது மாடியிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டு கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது.
ஈரானிய அதிகாரிகள் அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர்.
இதேவேளை
ஈரானில் உள்ள சுவிஸ் தூதரகம் அமெரிக்காவிற்காக பணியாற்றுவதாக ஈரான் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது