ஈரான் விமான நிலையம் மீது தாக்குதல்!

You are currently viewing ஈரான் விமான நிலையம் மீது தாக்குதல்!

தென்கிழக்கு ஈரானில் உள்ள ஈரான்ஷாஹர் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீயணைப்பு வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து வசதிகள் கட்டிடம் மற்றும் வானிலை ஆய்வு நிலையம் ஆகியவற்றின் மீது எறிகணைகள் தாக்கியதில், இரண்டு கட்டமைப்புகளும் சேதமடைந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசரக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், ஆனால் பணியில் இருந்த தீயணைப்பு வீரர் காலித் காதேரி இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply