ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் தென்னிந்திய ஊடகங்கள்!!

You are currently viewing ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் தென்னிந்திய ஊடகங்கள்!!

அண்மைக்காலமாக சர்வதேச ஊடகங்கள் இலங்கைத் தமிழர்கள் வறுமையில் வாடுவதாகவும், போரினால் நலிந்து போயுள்ளதாகவும் என்ற விம்பத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

சர்வதேச மேடைகளில், குறிப்பாக தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஈழத்தமிழர்களளை வறுமை , அனுதாபம் என்ற பெயரில் விற்கப்படும் செயல்முறையாக பரவலாக காணப்படுகின்றது.

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் அண்மைக்காலமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பலராலும் மிகவும் இரசிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சியாக பாடல் போட்டி  நிகழ்ச்சிகள் முதன்மை பெற்று வருகின்றன.

இந்த நிகழ்ச்சிகள் காலகாலமாக மக்களால் விரும்பப்பட்டு பார்க்கப்படும் நிகழ்ச்சிகளாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிகளில் ஈழத்தமிழ் போட்டியாளர்களை காட்டும் விதம் விமர்சனங்களையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இது போன்ற செயற்பாடுகள் மக்களிடத்தில் தமது தொலைக்காட்சியை நிலை நிறுத்தும் என்ற பாரிய நம்பிக்கையை உந்துகோளாக கொண்டு, மிக மோசமான ஒரு சமூகத்தை, அவர்களது வறுமையை விற்பனை செய்யும் மோசடி வேலைகளைத் தான் இந்த ஊடகங்கள் கையாண்டு வருகின்றன.

இலங்கையில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு சமூகத்தினரும், தங்களது வாழிடம், தொழில் உள்ளிட்டவற்றால் வேறுபடுகின்றனர். குறிப்பாக தமிழர்களைப் பொறுத்தமட்டில், வடக்கு – கிழக்கு அதிகமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, பாதிப்புக்களைக் கொண்ட பகுதியாக காணப்படும்.

மலையகத்தைப் பொறுத்தமட்டில் தேயிலைத் தோட்ட தொழில்துறையை நம்பி வாழ்வாதாரத்தைக் கொண்ட பகுதியாக காணப்படும்.

இங்கு வறுமை என்பது பொதுவானதே. இருப்பினும்இ இதே வறுமையை ஆதாரமாகக் கொண்டு பட்டம் பெற்றுஇ பல்வேறு துறைகளில் சாதித்தஇ சாதித்துக் கொண்டிருக்கும்இ சாதிக்க காத்திருக்கும் பல தலைமுறைகள் இங்கு உண்டு.

ஆனால், இதேபோன்று தனது திறமைக்கு அங்கீகாரம் தேடி தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஈழத்தமிழர்களளை  விற்பனைப் பொருட்களாக நோக்கப்படுவது என்பது நிச்சயமாக பணத்திற்காக ஒரு சமூகத்தையே இழிவுபடுத்தும் மோசடியாகவே பார்க்கப்பட வேண்டும்.

2009 ஆம் ஆண்டு எமது மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படும்போது வலிகளை வெளிக்கொண்டுவராத இவ் ஊடகங்கள் ஆடம்பர நிகழ்ச்சிகளை நடாத்தி தமிழ்நாட்டு உறவுகளிடம் உணர்வுகள் பொங்காது தடுத்து வந்தந்திருந்தது.

இப்போது தங்களின் வியாபாரத்திற்காக ஈழத்தமிழரின் வலிகளை கையில் எடுத்திருப்பது வலிசுமந்தவருக்கு வெறுப்பையே உருவாக்கியுள்ளது.

எமது மக்கள் கொல்லப்படும்போதும்  இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இந்த ஊடகங்கள் இயங்கியதுபோல் இன்றும் இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இந்த ஊடகங்கள் இயங்கிவருகின்றது என்பது அசைக்க முடியாத உண்மை.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply