ஈழத்தமிழ் மருத்துவர் பிரித்தானியாவில் கொரோனாவுக்குப் பலி!

ஈழத்தமிழ் மருத்துவர் பிரித்தானியாவில் கொரோனாவுக்குப் பலி!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய இலங்கையை சேர்ந்த தமிழ் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கிங்ஸ்டன் வைத்தியசாலையில் மருத்துவ ஆலோசகராக பணியாற்றிய 74 வயதுடைய அன்ரன் செபஸ்டியன் (திலகன்) என்ற மருத்துவரே உயிரிழந்தவர் ஆவார்.

வைத்திய துறையிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவையாளராக செயற்பட்ட அவர், பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், வைத்தியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக தள்ளாத வயதிலும் மீண்டும் சேவையில் ஈடுபட்டு கொரோனா நோயாளர்களை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

தனது வயதினையும் கருத்திற் கொள்ளாது மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பினை (1967) நிறைவு செய்துள்ளார். இவர் ஒரு எழுத்தாளரும் ஆவார். மருத்துவம், வரலாறு சார்ந்த சில புத்தகங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments