ஈழத்து சிறுமியின் சிந்தனையும் ஓவியத்தின் வெற்றியும்!

ஈழத்து சிறுமியின் சிந்தனையும் ஓவியத்தின் வெற்றியும்!
ஈழத்து சிறுமியின் சிந்தனையும் ஓவியத்தின் வெற்றியும்! 1

சுவிஸ் வங்கி நடத்திய ஓவியப் போட்டியில் தமிழ் சிறுமி வரைந்த ஓவியம் முதல் பரிசு பெற்றது தமிழினத்தின் வலிசுமந்த கண்ணீர் காவியமாய் ஓவியம்.

புலத்து இளையோரே! இனத்தின் வலி சொல்ல
இதுவும் ஒரு வழியே !

சுவிஸ் வங்கியொன்று தனது .
19ஆவது ஆண்டு நிறைவையொட்டி
ஓவியப்போட்டியொன்றை கடந்த
19 ஆம்திகதி ஒஸ்தியா தலைநகரில் நடத்தியது இதில் ஆயிரம் போட்டியாளர்கள் பங்கெடுத்தனர்.

இசையினை தொடர்பாக்கி உங்கள் சொந்த அனுபவத்தை ஓவியமாக வரைதல் என்பதே போட்டி விதிமுறை இதில் ஆர்காவ் மாநிலத்தைச்சேர்ந்த
எங்கள் ஈழத்துச்சிறுமி ஈழத்தின் கண்ணீர் காவியத்தை ஓவியமாக வரைந்தாள்.

ஒரு ஓவியத்திற்கான எண்ணங்களை தமிழினத்தின் வலிசுமந்த உயிரோட்டமான ஓவியமாக்கியவள் அபிர்சனா தயாளகுரு அவளின் ஆளுமையால் உலகத்திற்கு எங்கள் வலியையும் சொல்லி
முதலாம் பரிசினை தனதாக்கினாக்கிக்கொண்டாள்

பகிர்ந்துகொள்ள