ஈழத் தமிழர்களின் குருதிக் காவியம் மே18!

ஈழத் தமிழர்களின் குருதிக் காவியம் மே18!

ஈழ விடுதலை வரலாற்றில் பல தசாப்தங்களைக் கடந்து வந்த போதும் மறக்க முடியாத இன்னலக்ளை அனுபவித்தாலும் கூட நம் நெஞ்சங்களில் வடுவாக இருப்பது இன அழிப்பு நாளான மே 18.
ஆந்த நாட்களை மறக்க முடியுமா? நெஞ்சம் தான் மறக்குமா?
எம் உறவுகளின் அகதிப் பயணம் வன்னி நிலப்பரப்பெங்கும் தொடங்கியது. எங்கும் இனப்பகைவனின் விமானத் தாக்குதல்கள் தொடர்ந்தது. பாடசாலை செல்லும் சிறுவர் சிறுமியரைக் கூட கொடூரர்களின் இன வெறி விட்டு வைக்கவில்லை. பாடசாலைகள் மீதும் குண்டுமழை பொழிந்தனர். பிள்ளைகளை பறிகொடுத்னர் பெற்றோர். உற்றார் உறவுகளிலும் சிலரைப் பறிகொடுத்தும் வீரத்தோடும் மன வலிகலோடும் தொடர்ந்தது அடங்காப்பற்றின் அகதிப்பயணம்.

வன்னி நிலப்பரப்பெங்கும் எம் மக்களின் அவலங்கள் நிறைந்திருந்தது. உண்பதற்கு உணவில்லை குடிப்பதற்கு கூட நீரின்றி கால்கள் வலியெடுக்க வலியெடுக்க சொந்த நாட்டிலேயே அகதிகளாக நடந்தனர். வந்தோரை வாழ வைக்கும் எம் வன்னி நிலத்து மக்களே உணவின்றி தவித்த அந்த கொடுமையை மறக்கத்தான் முடியுமா? அது அழியாத நினைவுகள் அல்லவா?
ஆனாலும் எஞ்சிய தம்மைக் காப்பதற்காய் அகதிப் பயணம் தொடர்ந்தது. போகும் வழி எங்கும் அகோர எறிகணைகள் வீழ்ந்து வெடித்த வண்ணம் இருந்தன. ஒருசிலர் இறந்த போதும் மிஞ்சியவர்கள் காடுகள் மரங்களுக்குள் ஓடி ஒழிந்தனர்; கடினமான பயணத்தைத் தொடர்ந்தனர். எங்கு செல்வதென்று அறியாது கால் போன போக்கில் நடந்தனர். நடந்து கொண்டே இருந்தனர்.
ஆந்த நேரம் இனவெறி அரசால் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட அம்பலவன்பொக்கணை வலைஞர்மடம் புதுமாத்தளன் முள்ளிவாயக்;கால் ஆகிய இடங்களில் தஞ்சம் புகுந்தனர் எம் உறவுகள். ஆனாலும் எம் உறவுகளுக்கு இன வெறி பிடித்த சிங்கள அரசிடம் நம்பிக்கை இல்லாது இருந்தது உண்மை

அதனால் தமது தற்காலிக குடிசைகள் அருகே பாதுகாப்பிறகாய் பதுங்கு குழிகள் அமைத்து இருந்தனர். ஆனாலும் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்கள் மீதும் அரச பயங்கரவாதம் தமது கட்டவிழ்த்து விடப்பட்ட இன வெறித் தாக்குதல்களை தொடங்கின.
எங்கே போவதென்று அறியாத மக்கள் உயிர்ப் பாதுகாப்பிற்காய் பதுங்கு குழிகளுக்குள்ளே பல நாட்கள்; பதுங்கி இருந்தார்கள். இனவெறியர்களின் இனவெறித் தாண்டவம் அகோரமானது. மக்களைக் காப்பதற்காய் போர்களத்தில் நின்ற எம் படைகளின் போரும் வீறு கொண்டது.
இதனால் எம் வீர மைந்தர்களோடு போரிட்டு வெற்றி கொள்ள முடியாத பேரினவாத அரசு மண்டியிட்டது சர்வதேசத்திடம் மண்டியிட்டது. எம் தேசியத்தின் தலைவனின் சிறந்த இராணுவ திட்டமிடலும் ஆட்சிச் சிறப்பும் படைவீரமும் படைகளின் எழுச்சியையும் கண்ட சர்வதேசமும் இந்தியாவும் கை கோர்த்தது பெரும்பாண்மை சிங்கள அரசோடு. கைகோர்த்து இன அழிப்பு என்ற பார்வையில் சர்வதேசத்தின் துணையோடும் நவீனரக வெடிகுண்டுகளோடும் வந்தது போர் விமானங்கள். முள்ளிவாய்க்கால் தேடி வந்தது.

இனவெறிக் கோரத் தாணடவம் அகோரமானது. எம் மக்கள் பதுங்கு குழிகளுக்குள்ளே பதுங்கினர். செல் வீச்சுக்களும் எறிகணைகளும் விமான தாக்குதலும் தாங்க முடியாத மக்கள் பதுங்கு குழிகளுக்குள்ளே இருந்தனர். பாலகர்கள் பசியால் துடித்தனர். பசியினைக் கண்ட தந்தை உணவு தேட வெளியே வந்து உடல் சிதறி உயிர் துறந்தார். கணவனைக் காணவில்லை என்று தேடி வந்த தாயும் எறிகணை பட்டு உயிர் பிரிந்தார். ஒன்றும் அறியாப் பாலகர்கள் அனாதைகள் ஆக்கப்பட,;டார்கள்.
பதுங்குகழிக்குள் பதுங்கி இருந்தவர்கள் பலர் விமானம் வீசிய குண்டினால் உயிரோடு மூடப்பட்டார்கள். கொத்துக் கொத்தாக வந்து வெடித்த எறிகணைகளாலும் செல் வீச்சினாலும் விமான எரிகுண்டினாலும் எம்மினம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள்.

சிறிய நிலப்பரப்பில் மூன்றரை லட்சம் மக்களும் அடைபட்டனர். இது இனவெறியர்களின் இன அழிப்புக்கு சாதகமாக அமைந்தது

ளம் ஆனது. தெருவோரமெங்கும் சிதறிய உடல்களும் மக்களின் அழுகுரல்களும் நிறைந்த பேரவலம் கொண்டது முள்ளிவாய்க்கால.; எரிகுண்டுகளினால் வீடுகள் மண்ணோடு மண்ணானதும். ஓன்றும் அறியாப் பச்சிளம் பாலகர்கள் சிதைக்கப்பட்டதும். நிறைமாதக் கற்பினியின் வயிற்றல் செல் பட்டு குழந்தை வெளியே வந்ததும் தாய் இறந்ததும். காயமடைந்த மக்கள் மருந்தின்றி மடிந்ததும், ஒரு புறம் வயோதிபர்கள் குழந்தைகள் உணவின்றித் தவித்ததும், இறந்த தாயின் மார்பில் பால் அருந்திய குழந்தையும், இவை எல்லாம் இன அழிப்பின் உச்சமானது.
முள்ளிவாய்காலில் கரிகாலன் படைகளினதும் வீரம் மிக்க மக்களினதும் வீரக் குருதி ஆறாக ஓடியது மே 18 சிவந்தது. இக் குருதி ஆற்றில் மிதந்த தமது உறவவுகளின் உடலங்களைக் கடந்தும், மன வலிகளைச் சுமந்து கொண்டும் ; நீந்திச் சென்றனர் முளளிவாய்க்காலின்; குருதி ஆற்றைத் தாண்டி. குருதி ஆற்றைத் தாண்டியவர்கள் மீண்டும் நந்திக் கடலில் நீந்தி நந்திக் கடலோரம் ஓடினர்.
அங்கும் இனவெறிக் கூட்டம் எம் மக்களைச் சூறையாடியது.
இனவெறியனால் இளைஞர்கள் யுவதிகள் என்று பிரிக்கப்பட்டு கைகள் பிணைக்கப்பட்டும் கண்கள் மூடிமறைக்கப்பட்டும் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் சிலர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர் சிலர் கொடூரச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டார்கள்.

முதியவர்கள் சிறுவர்கள் அடிப்படை வசதியற்ற முட்கம்பி வேலிகளுக்குள்ளே அடைக்கப்பட்டார்கள். பல்லாயிரக் கணக்கான உறவுகளை இழந்த மன வலியோடு முட்கம்பிகளைப் பிடித்த வண்ணம் இருந்தனர் எம் உறவுகள்.
ஏத்தனை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம் நெஞ்சத்தை விட்டகலா வடுக்கள் இவை. எஞ்சியவர்களும் கால்களை, கைகளை, கண்களை இழந்து அங்கவீனர்கள் ஆக்கப்பட்டனர் பலர் அநாதைகள் ஆக்கப்பட்டனர். இளைஞர்கள் யுவதிகள் காணமல் ஆக்கப்பட்டனர். இன்றும் எம் உறவுகள் ஈழ மண்ணில் இன அழிப்பின் முள்ளிவாய்க்காலின் அழியாத வடுக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எம் உறவவுகள். என்றும் தமிழ் மக்களின் நெஞசங்களை விட்டகலா வடுக்கள் தமிழின அழிப்பு நாள் குருதியால் செதுக்கப்பட்ட குருதிக் காவியம்.
வீழ்த்தப்பட்டாலும் விழவிழ எழுவோம்!! எழுவோம்!!

தேவகி வாசன்.நோர்வே


பகிர்ந்துகொள்ள