ஈழ புனிதத் தீப்புரட்சி!

ஈழ புனிதத் தீப்புரட்சி!

எங்கும் உம் பேச்சு,
ஏங்குதே என் மூச்சு,
இன்று உடலைவிட்டிறங்கி
உலகெங்கும் பரவியதே
ஈழதின் புனித தீ புரட்சி //

ஊரெழு ஊரின்
உயிர் உருகி ஓய்ந்தது,
ஆண்டு முப்பத்துமூன்று
உன் உடலை மறைத்துச்சென்றது

இருந்தும் இந்த நிமிடம்
உன் நினைவால்
கொள்கை சுமந்து துடிக்கிறது //

பசியையே பன்னிருநாள்
தன் இன புரட்சியால் ருசிபார்த்தாய்,
லட்சியம் நாளை வெல்லுமென்று
இந்த சாவின் நட்ப்பினை
அகிம்சை உயிரே…..
நீ ரசித்தாய்

தீலிபா உன் உயிர்தான்
இன்று மயக்கம்,
தரனியின் லட்சிய அகிம்சையின்
நீதான் என்றும் நிரந்தர தொடக்கம், //

ஊரில் நடப்பதை பார்த்தாயா?
உலக தமிழே நீ ஒன்றுபடுவதில்
இன்னுமா தயக்கம்

இன்று தனித்தனியே ஏற்றிய தீபம்
இனி சேர்ந்தே எரியட்டும்,
உரிமையை அடைவோம்-அதை
காண தீபனின் கண்கள்
மீண்டும் திறக்கட்டும் //

தீபனின் கண்கள் மீண்டும் திறக்கட்டும்.

சஜிதரன்

5 16 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments