ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் – பேராயர்!

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் – பேராயர்!

மக்களின் நன்மைக் கருதி, ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள அனைவரையும் ஜனாதிபதி ஆணைக்குழு வெளிக்கொண்டுவர வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார். நீர்க்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இவ்வேளையில், நான் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திடம் விசேட வேண்டுகோளொன்றை முன்வைக்கிறேன்.

இன, மத, மொழி பேதங்களைக் கடந்து, அரசியல் கட்சி பேதங்களைக் கடந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறே தொடர்ச்சியாக பிளவுப்பட்டு நாம் செயற்பட்டு வந்தால், இந்த நாட்டை எவ்வாறு ஐக்கியப்படுத்துவது? அதேபோல், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பிரதானக் காரணக் கர்த்தாக்கள் யார் என்பதை ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக அறிவிக்க வேண்டும் என்றும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இதன் பின்னணியில் உள்ளவர்கள், குண்டை தயாரித்தவர்கள், இதற்கான ஊக்கத்தை வழங்கியவர்கள் என அனைவரது கைகளிலும் இரத்தம் படிந்துள்ளது. அத்தோடு, இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தக்கூடிய சூழ்நிலைக் கிடைத்தும், அதனை மேற்கொள்ளாதவர்கள் யார் யார் என்பதை கண்டறிந்து தண்டிக்க வேண்டும். எனவே, ஜனாதிபதி ஆணைக்குழு மக்களுக்கான இதன் உண்மைகள் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும்” என மேலும் தெரிவித்தார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments