உகாண்டாவில் மந்திரியை கொல்ல நடந்த சதியில் அவரது மகள் பலி!!

You are currently viewing உகாண்டாவில் மந்திரியை கொல்ல நடந்த சதியில் அவரது மகள் பலி!!

இவரது மந்திரிசபையில் தொழில் மற்றும் போக்குவரத்து துறை மந்திரியாக இருந்து வருபவர் கட்டும்பா வாமலா.முன்னாள் ராணுவ தளபதியான இவர் கடந்த 2019-ம் ஆண்டு மந்திரியாக பொறுப்பேற்றார். இந்த நிலையில் 64 வயதான மந்திரி கட்டும்பா வாமலா தலைநகர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அவரது இளம்வயது மகள் நாந்தோங்கோ உடன் இருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் மர்ம நபர்கள் சிலர் மந்திரி கட்டும்பா வாமலாவின் கார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது மகள் நாந்தோங்கோ மற்றும் கார் டிரைவர் ஆகியோரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. இதில் அவர்கள் இருவரும் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர். அதே சமயம் மந்திரி கட்டும்பா வாமலா காயங்களுடன் உயிர் தப்பினார்.  அவர் தற்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

உகாண்டாவில் மந்திரியை கொலை செய்ய நடந்த சதியில் அவரது இளம்வயது மகள் கொல்லப்பட்டது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments