உகான் வைராலஜி நிறுவனம் ; ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை!

உகான் வைராலஜி நிறுவனம் ;  ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்ததாக கூறுவது கட்டுக்கதை!

கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சையில் உகான் வைராலஜி நிறுவனம் தனது மவுனத்தை கலைத்தது. எங்கள் ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் கசிந்ததாக கூறுவது வெறும் கட்டுக்கதை என்று அந்த நிறுவனம் கூறி உள்ளது.

அமெரிக்கா, இந்த வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல, உகான் நகரில் உள்ள வைராலஜி நிறுவனத்தின் ஆய்வு கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான், அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவி இருக்கிறது என்று பரப்புரை செய்து வருகின்றது.

இதையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி Michael Pompeo கூறி வருகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அமெரிக்கா அறிவித்தது.

இந்த விவகாரத்தில் உகான் வைராலஜி நிறுவனம் இது வரை காத்து வந்த மவுனத்தை கலைத்துள்ளது.


இதுபற்றி அந்த நிறுவனத்தின் இயக்குனர் வாங் யான்யி கூறியதாவது:-

கொரோனா வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்தது என்று கூறுவது வெறும் கட்டுக்கதை ஆகும்.

‘கொரோனா வைரசை நாங்கள் வைத்திருக்கவில்லை. அந்த வைரசை நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. அந்த வைரஸ் இருப்பது பற்றி கூட எங்களுக்கு தெரியாது. அப்படி இருக்கிறபோது, எங்களிடம் இல்லாதபோது அந்த வைரஸ் எப்படி எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்தது?’ இவ்வாறு அவர் கூறியுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் கூறுகின்றன.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments