உக்கிரேனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலி!

You are currently viewing உக்கிரேனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலி!

கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட்டில் நடைபெற்று வரும் போரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தொடங்கி ஓராண்டை நிறைவு செய்து இருக்கும் நிலையில், ரஷ்யா தனது தாக்குதல் திறனை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கிழக்கு உக்ரைனிய நகரான பக்முட் மீது ரஷ்ய படைகள் தங்கள் கவனத்தை குவித்து வருகின்றனர்.

நகரின் தற்காப்பு இடங்கள் மீதான தாக்குதலுக்கு பிறகு கிரெம்ளின் படைகள் தொடர்ந்து தாக்குலில் முன்னேறி வருவதால் கிழக்கு நகரத்தின் வழியாக ஓடும் சிறிய நதி தற்போது போரின் முன் வரிசையாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் உக்ரைன் இராணுவ செய்தி தொடர்பாளர் Serhiy Cherevatyi வழங்கியுள்ள தகவலின் அடிப்படையில், சனிக்கிழமையன்று 221 ரஷ்ய சார்பு துருப்புக்கள் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையில், ரஷ்ய படைகளின் தாக்குதலால் பரந்த டொனெட்ஸ்க் பகுதியில் 210 உக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கூற்றுக்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் பக்முட் போரில் நூற்றுக்கணக்கான ராணுவ துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments