உக்ரைனின் தற்காப்புக்கு f16 விமானத்தை வழங்கும் டென்மார்க்!

You are currently viewing உக்ரைனின் தற்காப்புக்கு f16 விமானத்தை வழங்கும் டென்மார்க்!

breaking

உக்ரைன்-ரஷ்யா போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டும் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஆனால், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போர் விமானங்களை வழங்க தயக்கம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் உக்ரைனுக்கு எப்-16 ரக போர் விமானங்களை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.

இது குறித்து அந்த நாட்டின் இராணுவ அமைச்சர் டிரோல்ஸ் லண்ட் பால்சன் தெரிவிக்கையில்,

‘உக்ரைன்-ரஷ்யா போரில் ஒரு கட்டத்தில் போர் விமானங்களின் பங்களிப்பு என்பதை மறுக்க முடியாது. எனவே ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான உக்ரைனின் தற்காப்புக்கு உதவ எப்-16 ரக போர் விமானங்களை வழங்க டென்மார்க் அரசாங்கம் தயாராக இருக்கின்றது’ என தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments