உக்ரைனில் ரஷ்ய துருப்புகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க வீரர்கள்!

You are currently viewing உக்ரைனில் ரஷ்ய துருப்புகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க வீரர்கள்!

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் முதன்முறையாக அமெரிக்க வீரர்கள் இருவர் விளாடிமிர் புடினின் துருப்புகளால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வீரர்களான Robert Drueke மற்றும் Andy Huynh ஆகியோர் கடந்த வாரம் கார்கிவின் புறநகர்ப் பகுதியில் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் அலபாமா மாகானத்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உக்ரைன் பயணத்திற்கு முன்னர் இருவரும் நண்பர்களா என்பது தொடர்பில் தகவல் தெரியவில்லை எனவும், இருவரும் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக உக்ரைனில் தன்னார்வலர்களாகவே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Drueke அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றியவர் எனவும் Huynh கடற்படையில் பணியாற்றிவர் எனவும், ஆனால் போர் முனையில் பயிற்சி ஏதும் இல்லாதவர் எனவும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் இருவரும் சிறைபிடிக்கப்பட்ட தகவலை அமெரிக்க நிர்வாகம் உறுதி செய்துள்ளது. ஆனால் மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளது. மட்டுமின்றி வெள்ளைமாளிகை அதிகாரிகள் தரப்பும், இந்த விவகாரம் தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதனிடையே, அமெரிக்க வீரர்கள் இருவரையும் மயக்கமடைய வைத்து ரஷ்ய துருப்புகள் சிறைபிடித்திருக்கலாம் எனவும், குறிப்பிட்ட பகுதியில் ட்ரோன் விமானம் மற்றும் உக்ரைன் மீட்பு படைகளை அனுப்பி முன்னெடுத்த நடவடிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியது என பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வீரர்கள் இருவர் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம் ரஷ்ய தரப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பிரித்தானிய வீரர்கள் இருவருக்கு விதிக்கப்பட்டது போன்று மரண தண்டனை அமெரிக்க வீரர்களுக்கும் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments