உக்ரைனுக்கு பாதுகாப்புப் படை உருவாக்க நடவடிக்கை!

You are currently viewing உக்ரைனுக்கு பாதுகாப்புப் படை உருவாக்க நடவடிக்கை!

ரஷ்ய – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு வழங்கும் உதவியை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து உக்ரைனுக்கு பிரான்ஸ் இராணுவ உதவியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

அதேவேளை உக்ரைனில் போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், பிற்காலத்தில் ரஷ்யா மீண்டும் படையெடுத்தால், உக்ரைனுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பாக  இன்று (11) பாரீஸ் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதில் 30 நாட்டிற்கும் மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என பிரான்ஸ் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின் முதற்பகுதியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் திட்டம் குறித்து விவரிக்கப்படும். அதன்பின் மற்ற நாடுகளின் பாதுகாப்புப்படை பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

திடீரென ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ஒரு சில மணி நேரத்திற்குள் அல்லது ஓரிரு நாட்களில் உக்ரைனுக்கு இராணுவத் தளபாடங்களை அனுப்புவதுதான் பாதுகாப்புப் படையின் முதன்மையான நோக்கமாகும்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply