உக்ரைனை தாக்க பிரபல ஐரோப்பிய நாட்டை பயன்படுத்திய ரஷ்யா!

You are currently viewing உக்ரைனை தாக்க பிரபல ஐரோப்பிய நாட்டை பயன்படுத்திய ரஷ்யா!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த பிரபல ஐரோப்பிய நாடான பெலாரஸை பயன்படுத்தியதற்கான ஆதாரத்தை ரஷ்யாவே வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது 25வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்யா, தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்கள் மீது தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, பிரபல ஐரோப்பிய நாடும், புடினின் நட்பு நாடான பெலராஸிலிருந்து உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரேனிய அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

ஆனால், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்ய படைகள் தங்கள் நிலத்தை பயன்படுத்தவில்லை என பெலராஸ் மறுத்தது.

இந்நிலைியல், உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களுக்கு பெலாரஸின் ஹோம்ல் உள்ளூர் விமான நிலையத்தைப் பயன்படுத்தியதற்கான ஆதாரத்தை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஹோமலில் உள்ள விமானநிலையத்தில் இருந்து வெடிமருந்துகளுடன் ஓர்லான் ட்ரோன் புறப்பட்டதைக் காட்டும் வீடியோவை அமைச்சகத்தின் இணையதளம் இன்று வெளியிட்டது.

இதன் மூலம் உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பெலராஸை் ரஷ்யா பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments