உக்ரைன் அதிபரிடம் பேசவுள்ள சீன அதிபர்!

You are currently viewing உக்ரைன் அதிபரிடம் பேசவுள்ள சீன அதிபர்!

சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக தெரிவான ஜி ஜின்பிங், ரஷ்யா பயணத்தின் ஒரு பகுதியாக மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல பரிசீலித்து வருகிறார்.

எனினும், அவரது முழுப்பயணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடம் ஆன நிலையில், ஜெலென்ஸ்கியுடன் முதல் முறையாக ஜி ஜின்பிங் பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புடினை சந்தித்த பின்னர் அவர் ஜெலென்ஸ்கியுடன் பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த உரையாடல் இதுவரை ஐரோப்பாவில் சந்தேகத்தை எதிர்கொண்டுள்ள உக்ரைனில் சமாதானத்தை உருவாக்குவதற்கான பெய்ஜிங்கின் முயற்சிகளில் குறிப்பிடத்தக்க படியாக இருக்கும்.

கடந்த மாதம், உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவர போர்நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுக்களுக்கு அழைப்பு விடுப்பதில் சீன நடுநிலைவாதியாக தன்னைக் காட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments