உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை மிரள வைத்த மூன்று நாடுகள்!

You are currently viewing உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை மிரள வைத்த மூன்று நாடுகள்!

உக்ரைன் தானியங்கள் தொடர்பில் ரஷ்யா முடிவை கடுமையாக விமர்சித்துள்ள ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் துருக்கி, ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதனால், திட்டமிட்டபடி திங்கட்கிழமையும் 16 கப்பல்கள் தானியங்களுடன் உக்ரைனில் இருந்து புறப்படும் என துருக்கி, உக்ரைன் மற்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் உறுதிபட தெரிவித்துள்ளன.

ஐ.நா மன்றத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட கருங்கடல் ஒப்பந்தத்தை ரஷ்யா சனிக்கிழமை ரத்து செய்தது. இதனையடுத்து துருக்கியும் ஐ.நா. மன்றமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதுடன், குறித்த ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்ல தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டனர்.

மட்டுமின்றி, குவிந்துகிடக்கும் உக்ரைன் தானியங்கள் வெளியேறாமல் போனால் உலகளாவிய உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதை ஐ.நா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிக்கொள்ள, சர்வதேச சந்தையில் கோதுமை விலை திங்கள்கிழமை தடாலடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜூலை மாதம் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கு பின்னர் உக்ரைனில் இருந்து இதுவரை 9.5 மில்லியன் டன் சோளம், கோதுமை, சூரியகாந்தி பொருட்கள், பார்லி, ராப்சீட் மற்றும் சோயா ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஆனால், ரஷ்யா விலகியுள்ள நிலையில் ஞாயிறன்று எந்த ஏற்றுமதியும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் திட்டமிட்டபடி 16 கப்பல்களில் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படும் என துருக்கி, உக்ரைனுடன் இணைந்து ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு முன்னர், ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் மெட்ரிக் டன் தானியங்களை உக்ரைன் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்துள்ளது. ஆனால் ஜூலை மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட கருங்கடல் ஒப்பந்தம் காரணமாக மீண்டும் ஏற்றுமதி துவக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தமானது நவம்பர் 19ம் திகதி முடிவுக்கு வரும் என்ற நிலையில், உக்ரைன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரஷ்யா விலகியுள்ளது. மட்டுமின்றி 218 கப்பல்களை உக்ரைன் துறைமுகங்களை நெருங்கவிடாமல் தடுத்தும் வருகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments