உங்கள் கனவில் கூட இப்படி ஒரு கண்ணியம் மிகுந்த போர் வீரன் வரமாட்டார்!

உங்கள் கனவில் கூட இப்படி ஒரு கண்ணியம் மிகுந்த போர் வீரன் வரமாட்டார்!

நான் அமெரிக்காவில் பிறந்தாலும் தமிழீழத்தில் வளர்ந்த பெண். தலைவர் பிரபாகரனுடன் நேரில் பழகிய பெண், பிரபாகரன் என்பவர் நீங்கள் எல்லாம் விமர்சிக்கும் சாதாரண பிறப்பு அல்ல.. அவர் ஓர் அகராதி.. தமிழீழம் எப்படிப்பட்டது என்ற சுவையை அறிந்த பெண் நான்.. உங்களால் பிரபாகரனை கற்பனையில் கூட காண முடியாது ..

தலைக்கனம் நிறைந்த ஒருவரா தன் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி சுகமாக வாழ வைக்கத் தெரியாமல் தன் மண்ணிற்கு பலியிட்டார். ஒரு முறை தன் தலையை ஆட்டியிருந்தால் கூட இலங்கையின் முடிசூடும் பெரு மன்னன் ஆகியிருப்பார்..

எந்த ஒரு சிங்களவரும் இதுவரை பிரபாகரன் என்ற அந்த மாமனிதனைத் தவறாய்க் கூறியதில்லை.. 40 வருட போராட்ட வரலாற்றில் சிங்கள மக்கள் மேல் சிறு கீறு கூட விழுமளவிற்கு நடந்துகொண்டதில்லை..

எந்த ஒரு பெண்ணும் விடுதலைப்புலிகளால் பாலியல் துன்பங்களை அனுபவித்ததில்லை..
எம் நாட்டில் சாதி என்ற ஒன்றைப் பற்றி பேசவே இடம் இல்லை..
நான் என் இளம் வயதில் இரவு பன்னிரெண்டு மணிக்கும் வீதியில்நடந்து செல்வேன்..
எந்தப் பயமும் உணர்ந்ததில்லை..

விடுதலைப் புலிகள் ஆட்சியில் எந்த ஒரு தமிழ் சிறுவனும் புகைபிடித்த வரலாறு இல்லை..
எந்த ஒரு வல்லாதிக்க உதவியும் இல்லாமல் .. கடற்படை , வான் படை, தரைப்படை, விமானப்படை, கரும்புலிப்படை, பீரங்கிப்படை, தமிழீழ காவற்துறை.. இப்படி எத்தனை துறைகள் நீங்கள் அறிவீர்களா.. இதில் இருக்கும் எந்தப் போராளியும் மது , புகைப் பழக்கம் அறவே அற்றவர்கள்..! குறுகிய மக்கள் துணைகொண்டு பெரும் படை அமைத்த மாவீரன் புகழ் அறிவீர்களா நீங்கள்..

எம் தலைவன் காலில் யாரும் விழுந்ததில்லை அது தெரியுமா உங்களுக்கு.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி தவறாகப் பேசும் தம்பிகளே .. எம் நாட்டில் பிரபாகரன் ஆட்சியில் பிச்சைக்காரனை நான் கண்டதில்லை.. குண்டு மழைகளுக்கு இடையில் கல்வி பயின்றவர்கள் நாங்கள்.. எம் தலைவன் கட்டிக்காத்த மாபெரும் பண்பாட்டில் வளர்ந்தவர்கள் நாங்கள்.. இராஜ இராஜ சோழன் தொடக்கம் மனுநீதிச் சோழன் வரை அத்தனையும் ஒன்றாகி நின்ற வரலாற்று பெருமகனுடன் வாழ்ந்தவர்கள் நாங்கள்..

எம் போராட்டம் தோற்றுப் போயிருக்கலாம் .. 21 நாடுகள் சேர்ந்து ஒடுக்கிய ஒரு வீரம் செறிந்த போராட்டம்.. மீண்டும் அமையுமா தெரியாது .. ஆனால், மீண்டும் ஓர் பிரபாகர் உருவாக பல கோடி ஆண்டுகள் வேண்டும் .. அவரைப் பற்றி எடைபோடும் சக்தி அவர் மண்ணில் அவரோடு பயணித்தவர்களால் கூட முடியாது..

உங்கள் கனவில் கூட இப்படி ஒரு கண்ணியம் மிகுந்த போர் வீரன் வரமாட்டார்.. உங்கள் கனவிற்கும் எட்டாத பேரொளி பற்றி பேசாதீர்கள்..!

5 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments