உண்ணாவிரத போராட்டத்தினையும் தடைசெய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர்!

உண்ணாவிரத போராட்டத்தினையும் தடைசெய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர்!

தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வினை முன்னெடுப்பதற்கு யாழ்.நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கடச்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தன.

நாளை (26) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நீதி மன்றில் தடை உத்தரவு பெறக்கோரும் நோக்கில் வல்வெட்டித்துறை பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றை நாடி அங்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பிலான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாழ்.நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கான கோரிக்கை மனுவை பொலிஸாரே தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள