உதயநிதி ஸ்டாலினுக்கு பிணையில் செல்ல அனுமதி!

You are currently viewing உதயநிதி ஸ்டாலினுக்கு பிணையில் செல்ல அனுமதி!

தஞ்சாவூர் செங்கிப்பட்டி பொலிஸ் நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர் பொலிஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு பொலிஸ் நிலைய பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிக்காக கூடுதல் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இரவு சுமார் 8.15 மணியளவில் உதயநிதி பொலிஸ் நிலையத்தில் இருந்து சென்றுள்ளார்.

தனது காரில் இருந்தபடியே அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை நோக்கி கையசைத்தபடி அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply