உதயநிதி ஸ்டாலின் கைது!

You are currently viewing உதயநிதி ஸ்டாலின் கைது!

தமிழக எதிர்க்கட்சித்தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக த.வெ.க. அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது த.வெ.க. மகளிரணியினர், தஞ்சாவூர் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாடில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், சாலை மறியல் போராட்டத்திலும், கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், பல்வேறு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பதற்றத்தினை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் பெருமளவு ஆதரவாளர்கள் குவிந்துள்ளதுடன், பெரும் பரபரப்பு நிலவுகின்றது.

இந்த நிலையில் உதயநிதியின் நீலாங்கரை வீட்டை சுற்றி காலை முதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், திமுகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply