உன்னிச்சை குளத்தில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி மரணம்!

You are currently viewing உன்னிச்சை குளத்தில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி மரணம்!

மட்டக்களப்பு – உன்னிச்சை குளத்தில் நேற்று மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயது மற்றும் 35 வயதுடைய இருவர் நீரில் மூழ்கினர். அவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுணதீவு காயமடு பிரதேசத்தைச் 35 வயதுடைய மனோகரன் கண்ணதாசன் சடலமாக மீட்கப்பட்டுள்ள அதேவேளை 17 வயதுடைய விஷ்ணுகாந் விதுஷனன் காணாமல் போயுள்ளார் என சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

17 வயது சிறுவன் குளத்தில் மூழ்கியதையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக குளத்தில் குதித்த 35 வயதுடைய நபர் நீரிழ் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குளத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் மற்றும் சிறீலங்கா இராணுவத்தினர் இணைந்து காணாமல் போனவரை தேடியபோது அவரை கண்டுபிடிக்காத நிலையில் கடற்படையின் உதவியை கோரியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments