உயர்நிலை பள்ளி மாணவர் உட்ப்பட 30பேர் பலி!

You are currently viewing உயர்நிலை பள்ளி மாணவர் உட்ப்பட 30பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் முன்னெடுத்த கார் குண்டுவெடிப்பில் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உடபட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு லோகர் மாகாண தலைநகர் Pul-e-Alam பகுதியில் அமைந்துள்ள ஒரு விருந்தினர் இல்லத்தில் மாணவர்கள் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையிலேயே கார் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 90 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

குண்டுவெடிப்பை அடுத்து, கூரைகள் இடிந்து விழுந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விவரித்துள்ளனர்.

இதுவரை இந்த தாக்குதல் தொடர்பில் எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வுக்காக தயார் செய்து கொண்டவர்கள் என கூறப்படுகிறது.

எதிர்வரும் செப்டம்பர் 11 க்குள் அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்ததிலிருந்து ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments