உருத்திரபுரம் சிவன்கோவிலுக்கு அருகில் ஆய்வுகள்!

உருத்திரபுரம் சிவன்கோவிலுக்கு அருகில் ஆய்வுகள்!

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் அமைந்துள்ள சோழர் காலத்து சிவன் கோவிலான
உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் காணிக்குள் உள்ள பிரதேசம் கடந்த சில
ஆண்டுகளுக்கு முன் தொல்லியல் திணைக்களம் மரபுரிமை சார்ந்த பிரதேசம் என
அடையாளப்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தனர்.

குறித்த பிரதேசம் வராலாற்று எச்சங்கள் காணப்படுகின்ற பிரதேசம் என்பதனால்
தொல்லியல் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் அகழ்வாராச்சி மேற்கொள்வதற்காக
புத்தசாசன அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டு வரும் ஜனவரி மாதம்
அகழ்வாராச்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

பகிர்ந்துகொள்ள