உலகக் கிண்ண வரலாற்றில் சாதனை வீரன் எம்பாப்பே!

You are currently viewing உலகக் கிண்ண வரலாற்றில் சாதனை வீரன் எம்பாப்பே!

 2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரராக முதலிடம் பிடித்து, ஃபிஃபா உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை ‘கோல்டன் பூட்’ (Golden Boot) விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.

இத்தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய எம்பாப்பே 10 கோல்களை அடித்து, லியோனல் மெஸ்ஸியுடனான கடுமையான போட்டியை முறியடித்து இவ்விருதைக் கைப்பற்றினார்.

இதற்கு முன்னர் 2022 கட்டார் உலகக் கிண்ண தொடரிலும் 8 கோல்களை அடித்து எம்பாப்பே கோல்டன் பூட் விருதை வென்றிருந்தார்.

உலகக் கிண்ண போட்டிகளில் வரலாறு படைத்தார் எம்பாப்பே! | Mbappe Makes World Cup History

இதன் மூலம் அடுத்தடுத்த உலகக் கிண்ண தொடர்களில் இவ்விருதை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். 1970 ஆம் ஆண்டு மேற்கு ஜெர்மனியின் கெர்ட் முல்லருக்குப் பின்னர், ஒற்றை உலகக் கிண்ணத் தொடரில் 10 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை 27 வயதான எம்பாப்பே பெற்றுள்ளார்.

உலகக் கிண்ண வரலாற்றில் இவரை விட பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958 இல் 13 கோல்கள்) மற்றும் ஹங்கேரியின் சாண்டோர் கோக்சிஸ் (1954 இல் 11 கோல்கள்) ஆகிய இருவர் மட்டுமே ஒரே தொடரில் அதிக கோல்களை அடித்துள்ளனர்.

உலகக் கிண்ண வரலாற்றில் ஒட்டுமொத்தமாக அதிக கோல்களை அடித்த ஆண்கள் பிரிவின் சாதனையாளராக எம்பாப்பே (22 கோல்கள்) உருவெடுத்துள்ளார். இதன் மூலம் லியோனல் மெஸ்ஸியை (21 கோல்கள்) அவர் முந்தியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply