உலகின் தலைசிறந்த ஆசிரியர்களில் ஒருவராக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் பெண் தேர்வு!!

உலகின் தலைசிறந்த ஆசிரியர்களில் ஒருவராக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் பெண் தேர்வு!!

உலகின் தலைசிறந்த ஆசிரியர்களில் ஒருவராக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழ் பெண் தேர்வு.உலகளாவிய ரீதியில் சிறந்த ஆசிரியர்கள் 10 பேரை தெரிவு செய்வதற்கான போட்டி ஆஸ்திரேலியாவின் வர்கீஸ் பவுன்டேஷனால் கடந்த 5 வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்றது இதில் உலகில் உள்ள 179 நாடுகளில் இருந்து 10000 மேற்பட்ட விண்ணப்பதாரிகளுக்கிடையே இந்த தேர்வு இடம்பெற்றது.

இந்த தேர்விலேயே ஆஸ்திரேலியாவில் வசிக்கும் யசோதை செல்வக்குமார் பத்து பேரில் ஒருவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த கலவரத்தின்போது அங்கிருந்து வெளியேறி இவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடியேறியது.மலைவாழ் மக்கள் கல்வி கற்க இவர் ஆற்றிய பணிக்காக இந்த முதன்மை விருது வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த உலகை பற்றிய அறிவையும், அவர்கள் குரலை ஒலிக்கச் செய்வதிலும் யசோதை பெரும் பங்காற்றியிருக்கிறார்.உலகின் சிறந்த ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட யசோதைக்கு ஆஸ்திரேலிய நடிகர் ஹக் ஜேக்மேன் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வழங்கினார்.

பகிர்ந்துகொள்ள