ஒஸ்லோ:
ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான “Qantas”, உலகின் மிக நீளமான இடைநிறுத்தமற்ற (Non-stop) வணிக விமான சேவையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த சேவை சிட்னி–லண்டன் மற்றும் பின்னர் சிட்னி–நியூயார்க் இடையே இயக்கப்பட உள்ளது.
இந்த சேவைக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட Airbus A350-1000ULR விமானம் பயன்படுத்தப்படுகிறது. கூடுதல் எரிபொருள் தாங்கியோடு வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், சுமார் 20 முதல் 22 மணி நேரம் வரை இடைநிறுத்தமின்றி பறக்கும் திறன் கொண்டது.
அண்மையில் நடைபெற்ற சோதனைப் பறப்பில், மெல்போர்னிலிருந்து பிரான்சின் டூலூஸ் வரை 24 மணி 24 நிமிடங்கள் தொடர்ந்து பறந்து புதிய சாதனை படைத்தது.
நீண்ட பயணத்தில் பயணிகளின் வசதிக்காக, விமானத்தில் “Wellbeing Zone”, உடற்பயிற்சி செய்யும் பகுதி, உடலின் உயிரியல் கடிகாரத்துக்கு ஏற்ப மாறும் ஒளி அமைப்பு, மேம்படுத்தப்பட்ட காற்றழுத்தம் மற்றும் ஈரப்பத கட்டுப்பாடு உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.
Qantas நிறுவனம் தனது முதல் சிட்னி–லண்டன் நேரடி வணிக விமான சேவையை 2027 அக்டோபர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி “Project Sunrise” என்ற பெயரில் முன்னெடுக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
05.08.2026






