உலகின், முன்னாள் மின்னல் வேக மனிதர் “Usain Bolt” தந்தையானார்!

உலகின், முன்னாள் மின்னல் வேக மனிதர் “Usain Bolt” தந்தையானார்!

Jamaica நாட்டின் பிரதமர் “Andrew Holness” தனது ட்விட்டர் பக்கத்தில் எங்கள் நாட்டின் ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் – கேசி பென்னட் தம்பதியினருக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது என கூறி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Usain Bolt” ஒலிம்பிக் போட்டியில் வீழ்த்த முடியாத வீரனாக வலம்வந்தவர். தொடர்ந்து (2008, 12, 16) மூன்று ஒலிம்பிக் போட்டியிலும் 100 மீ, 200மீ என இரண்டிலும் தங்கப்பதக்கத்தைக் கழுத்தில் ஏந்தியதோடு, உலகச் சாதனையும் நிகழ்த்தியவர். மேலும் 100 மீ தொடர் ஓட்டப்பந்தயத்திலும் இரண்டு தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி சாதனைக்கு மேல் சாதனை நிகழ்த்தியவர்.

ஓட்டப்பந்தயத்திற்கு விடை கொடுத்த போல்ட் தற்பொழுது கால்பந்து விளையாட்டில் களம் புகுந்துள்ளார். மின்னல் வேக மனிதன் தந்தையானதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments