சீனா
சீன துறைமுகத்தில் சரக்கு கப்பல் தீப்பிடித்ததில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர். சீனாவிலுள்ள துறைமுகத்திற்கு லைபீரிய நாட்டு கொடியுடன் கூடிய ஓசன் மெலோடி என்ற பெயரிட்ட சரக்கு கப்பல் ஒன்று வந்து நிறுத்தப்பட்டு உள்ளது.
கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்தனர்.இந்த நிலையில், அந்த கப்பல் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி 20 பேர் பலியாகி உள்ளனர்.
எனினும், கப்பலில் இருந்து 12 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டனர். மீதமுள்ள நபர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
பிலிப்பைன்
பிலிப்பைன்ஸில் பயணிகள் சொகுசு கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.
அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.தலைநகர் மணிலாவிலிருந்து சுற்றுலாத் தலமான பலாவனின் கொரோன் பகுதிக்குச் சென்ற ‘எம்வி ஜூன் ஆஸ்டர்’ என்ற பிரமாண்ட சொகுசு கப்பலில் 117 பயணிகள், 17 ஊழியர்கள் என மொத்தம் 134 பேர் சென்று கொண்டிருந்தனர்.
நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது, கப்பலில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.இது கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. கொளுந்து விட்டு எரிந்த இந்தத் தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
சுவிஸ்
சுவிட்சர்லாந்தின் சோலோதூர்ன் மாகாணத்தில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
அந்தக் கட்டிடம் முற்றிலுமாக அழிந்து விட்டது. சேதத்தின் மதிப்பு பல நூறு ஆயிரம் சுவிஸ் பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெல்லாச்சில் உள்ள பழங்கள் மற்றும் காய்கறி மொத்த விற்பனையாளரான சிரகுச கட்டிடத்திற்குள் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சோலோதூர்ன் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.






