உலக அளவில் கொரோனா ; பலியானோர் எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது!

உலக அளவில் கொரோனா ;  பலியானோர் எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியது!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த நிலையில், உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 4 இலட்சத்தை தாண்டியுள்ளது.

உலகளவில் இன்று இதுவரை மேலும் 80,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போழுது 6,920,920 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் உலக அளவில் கொரோனா வைரசால் இன்று இதுவரை 2,697 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை தற்போது 4,00,143 ஆக உயர்ந்துள்ளது கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,388,291 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில்,

  • முதலிடத்தில் அமெரிக்காவும் (இதுவரை பாதிப்பு – 1,977,493 பேர், உயிரிழப்பு – 111,738 பேர்)
  • இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (பாதிப்பு – 651,980 பேர், உயிரிழப்பு – 35,211 பேர்),
  • மூன்றாவது இடத்தில் ரஷ்யாவும் (பாதிப்பு – 4,58,689 பேர், உயிரிழப்பு – 5,725 பேர்) உள்ளன.

தரவுகள் : worldometers

5 3 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments