உலக சமாதானத்தை சிதைக்கும் நேட்டோ! சீனா பதிலடி!!

You are currently viewing உலக சமாதானத்தை சிதைக்கும் நேட்டோ! சீனா பதிலடி!!

நேட்டோ கூட்டமைப்பு, உலக சமாதானத்தை சிதைப்பதோடு, உலக சமநிலையையும் கேள்விக்குள்ளாக்குகிறது என சீனா தெரிவித்துள்ளது.

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளுக்கும், ஐரோப்பாவுக்கும் சீனா அச்சுறுத்தலாக அமைகிறது என முதன்முதலாக நேட்டோ கடுமையான அறிக்கையொன்றை பதிவு செய்துள்ளதையடுத்து இதுகுறித்து சீன வெளியிட்டுள்ள பதில் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோவின் சீனா தொடர்பிலான அறிக்கை அபத்தமானது என சாடியிருக்கும் சீனா, உண்மையான நிலைமையை அறிக்கையிடுவதை தவிர்த்து, உண்மைக்குப்புறம்பான விதத்தில் நேட்டோ தனது அறிக்கைகளை வெளியிடுகிறது எனவும் கடிந்துள்ளதோடு, நேட்டோவுக்கும், ஐரோப்பாவுக்கும் சீனா அச்சுறுத்தலாக உள்ளதென நேட்டோ அறிக்கையிடுவது, முற்றிலும் பயனற்றது என நேட்டோவை சீன எச்சரிக்கி விரும்புகிறது எனவும் தெரிவித்துள்ளது.

உக்ரைன்மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில், ரஷ்யா மீது கண்டனமெதையும் தெரிவிப்பதை தவிர்த்து வருவதோடு, ரஷ்யாவுடனான தனது உறவுகளை மென்மேலும் இறுக்கமாக வைத்துக்கொள்ளவே சீனா விரும்புகிறது என, இம்மாத நடுப்பகுதியில் சீன அதிபர் தெரிவித்திருந்ததன் பின்னணியிலேயே, சீனாவுக்கெதிரான நேட்டோவின் கடுமையான அறிக்கை வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments