உலக சுகாதார அமைப்பு : கொரோனா பங்களிப்பில் 622 மில்லியன் டாலர்கள்!

உலக சுகாதார அமைப்பு :  கொரோனா பங்களிப்பில் 622 மில்லியன் டாலர்கள்!

உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக 622 மில்லியன் டாலர் நன்கொடைகளைப் பெற்றுள்ளது. இது அண்ணளவாக 6.6 பில்லியன் NOK ஆகும்.

பிப்ரவரி தொடக்கத்தில், WHO கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக 675 மில்லியன் டாலர் நன்கொடைகளைக் கேட்டிருந்தது. பெரும்பாலான பணம் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் புனரமைக்க பயன்படும் என்று WHO கூறியுள்ளது .

WHO இப்போழுது கோரப்பட்ட முழுத் தொகையையும் பெற்றுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பங்களித்த நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளோம் என்றும் இதுவரை 622 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகை பெறப்பட்டுள்ளது என்றும் WHO இன் பணிப்பாளர் நாயகம் Tedros Adhanom Ghebreyesus இன்று திங்கள் பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.(NTB)

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments