உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படும் – சுகாதார அமைச்சர்!

உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படும் – சுகாதார அமைச்சர்!

தேவைப்படும் காலம்வரை உள்ளிருப்புக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படும் என சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சரான ஒலிவியே வெரொன் தெரிவித்துள்ளார்.  

“நாங்கள் கொரோனாத் தாக்குதலின் உச்சத்தினை இன்னும் அடையவில்லை. அதனால் உள்ளிருப்பிலிருந்து வெளியேறுவது பற்றி, இப்போதைக்குக் கதைப்பது அவசியமற்றது. எனக்குப் பிரெஞ்சு மக்களின் பொறுமையற்றதனம் தெரிகின்றது. ஆனாலும் என்றுமில்லாதவாறு உள்ளிருப்பென்பது தற்போது மிகவும் அத்தியாவசியமாகின்றது. எவ்வளவு காலம் அவசியமோ அவ்வளவு காலம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார். உள்ளிருப்பு கொரோனவின் பரவலை இப்பேது தான் சற்றுக் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது. ஆனால் அது இன்னமும் உச்சத்தினை அடையவில்லை. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வைத்திசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments