உள்ளூர் பொருளாதார நட்டங்களை ஈடு செய்ய 100 மில்லியார்டர் குறோணர்கள்! பிரதமர் அறிவிப்பு!!

உள்ளூர் பொருளாதார நட்டங்களை ஈடு செய்ய 100 மில்லியார்டர் குறோணர்கள்! பிரதமர் அறிவிப்பு!!

“கொரோனா” பாதிப்பினால் சரிந்து போயிருக்கும் நோர்வேயின் உள்ளூர் பொருளாதாரத்தை தக்கவைப்பதற்கு அரசாங்கம் சுமார் 100 மில்லியார்டர் குறோணர்களை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் “Erna Solberg” அம்மையார் இன்று மாலை தெரிவித்தார்.

கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் நிறுவனங்களுக்காக காப்புறுதியாகவும், கடனாகவும் இரு வேறுபட்ட முறைகளில் பொருளாதார ஊக்கங்களை வழங்க அரசு தீர்மானித்திருப்பதாக தெரிவித்திருக்கும் பிரதமர், உடனடி நடவடிக்கைகளின் அவசியத்தை உணர்ந்தே அரசு இம்முடிவை எடுத்திருப்பதாகவும், தேவையேற்படின் அரசு சார்பாக வழங்கக்கூடிய பொருளாதார ஊக்கத்தொகை அதிகரிக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments