ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் புறக்கணிக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்!

You are currently viewing ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் புறக்கணிக்கும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முழு நேரமாக கடமை புரிந்து வரும் ஊடகவியலாளர்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலை தொடர்ந்த வண்ணமே இருந்து கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்பங்கள் கையளிக்கும் நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இறுதி அறிக்கைக்காக காலை 8 மணி முதல் இரவு 6 மணி வரை ஊடகவியலாளர்கள் வெளியில் காத்திருந்தனர்.

இறுதியாக வேட்பாளர்களுடன் இடம்பெற்ற கூட்டம் நிறைவடைந்த நிலையில் அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ அறிவிப்பிற்காக காத்திருந்த ஊடகவியலாளர்கள் அரசாங்க அதிபரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது காலை 6 மணிக்கு வந்த காரணத்தினால் இரவு ஆறு மணி வரை தொடர்ச்சியாக வேலை செய்ததால் தன்னால் குரல் பதிவு மற்றும் இறுதி அறிவிப்பை அறிவிக்க முடியாதென ஊடகவியலாளர்கள் தெரிவித்து சென்றுள்ளார்.

இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இல்லாத ஒரு புதிய நடைமுறையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முழு நேர ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தாலும் அங்கு இருக்கின்ற தகவல் திணைக்களமும் சேர்ந்து ஊடகவியலாளர்களை புறந்தள்ளிய நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர்.

ஊடகவியலாளர்களுக்கு தகவல்களை வழங்க வேண்டிய தகவல் திணைக்கள அதிகாரிகள் தங்களது சுயலாபத்திற்காக ஊடகவியலாளர்களை உள்ளுக்குள் அனுமதிக்க விடக்கூடாது என தெரிவித்துள்ளதாகவும் மாவட்ட செயலகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளை தாங்களாகவே ஒளிப்பதிவு செய்து ஊடகங்களுக்கு அனுப்புகின்ற செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று கொண்டு வருகின்றது.

மாவட்ட செயலகத்தில் இருக்கும் தகவல் திணைக்களம் தங்கள் வரம்புக்கு மீறி ஊடகவியலாளர்களை பாதிப்படையச் செய்யும் நடவடிக்கையிலேயே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

ஆகவே இலங்கையில் எந்த மாவட்டத்திலும் இல்லாத இந்த புதிய நடைமுறை ஊடகவியலாளர்களை கண்டு அஞ்சி பயப்படுகின்ற நிலை மாற்றப்பட்டு தகவல் திணைகள அதிகாரிக்கு வழங்கப்பட்ட அவருடைய அதிகார கட்டுக்கோப்புக்குள் ஊடகவியலாளர்களுக்கு தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்து மீறி செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற ஊடகவியலாளர்களின் நலனைக் கருதில் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தகவல் திணைக்கள அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடகவியலாளர்களுக்கு தகவலை வழங்க வேண்டிய தகவல் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் தாங்கள் ஏதோ ஊடகங்கள் என்ற ரீதியில் கங்கணம் கட்டிக்கொண்டு தாங்களே ஒழிப்பதிவை எடுத்து ஊடகங்களுக்கு அனுப்புகின்ற செயற்பாடுகளை நிறுத்துவதோடு ஊடகவியலாளர்களுக்குல் பிளவுகளை ஏற்படுத்தாமல் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என்று பாதிக்கப்பட்ட முழு நேர ஊடகவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மாவட்ட செயலகத்தில் நடக்கின்ற அனைத்து நிகழ்வுகளும் அனைத்து முழுநேர ஊடகவியலாளர்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்துக்கு சேவை செய்ய வந்த அரசாங்க அதிபர் நேரம் பார்த்து வேலை செய்வதாக இருந்தால் மாவட்டத்து மக்களின் குறை நிறைகளை எவ்வாறு நிறைவேற்றுவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments