ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர் நோர்வே குடியுரிமை!

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர் நோர்வே குடியுரிமை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலார்கள் மரக்கடத்தல் காரர்களால் தாக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.


இன்னிலையில் தாக்குதலுடன் தொடர்புடைய நால்வரில் முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த நோர்வே நாட்டின் வதிவிட பிரயாஉரிமை பெற்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.


ஊடகவியலாள்களின் ஒளிப்பட கருவிகள் அடித்து பறித்து அதில் உள்ள நினைவு அட்டையை எடுத்து மனைவியிடம் கொடுத்துவைத்துள்ளார்.
இச்சம்பத்துடன் தொடர்புடைய 27 அகவையுடைய குற்றவாளியினை கைதுசெய்த காவல்த்துறையினர் விசாரணை செய்த போது அவரின் மனைவி ஊடகவியலாளர்களின் பொருட்களை உடமையில் வைத்துள்ள குற்றச்சாட்டில் மனைவியும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


இன்னிலையில் குற்றவாளிகள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது குற்றவாளியின் மனைவி ஒரு இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபா ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் ஊடகவியாளரை தாக்கிய குற்றவாளி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட முதன்மை குற்றாவாளி இன்று காலை முல்லைத்தீவு காவல்த்துறையால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்க உட்படுத்தப்பட்டு வருவதுடன் நாளை காலை அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சிறீலங்கா காவல்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளார்கள்

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments