ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்!

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 5 க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் சென்று வீட்டின் நுழைவாயில் மற்றும் கதவு என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு, அங்கிருந்து தப்பி சென்றனரென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் குறித்த ஊடகவியலாளரது வீட்டின் முன்பாக உள்ள மற்றொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அதன்போதும் ஊடகவியலாளர் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த குடும்பத்தினர் அங்கிருந்து இடம்பெயர்ந்த நிலையில், நேற்றைய தினம் மீண்டும் ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மானிப்பாய் காவல்த்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த