ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாககாவல் துறையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 274 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 15490 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும்  சிறிலங்கா காவல் துறை  ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
Next PostRead more articles
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments