ஊரடங்கு சட்டத்திலும் ஊதாரிகளின் அட்டகாசம்!

You are currently viewing ஊரடங்கு சட்டத்திலும் ஊதாரிகளின் அட்டகாசம்!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையிலும், யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். அாியாலை- நாவலடி பகுதியில் இன்றிரவு 7.30 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியுள்ளது. இதன்போது ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாள்வெட்டுக்கு இலக்கானவா் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வாள்வெட்டு நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

பகிர்ந்துகொள்ள