ஊரடங்கு தளர்வு ; குழந்தைகளை சீக்கிரம் உறங்க வைத்து, எழ வைக்கும் காலம்!

 • Post author:
You are currently viewing ஊரடங்கு தளர்வு ; குழந்தைகளை சீக்கிரம் உறங்க வைத்து, எழ வைக்கும் காலம்!

கொரோனாவால் ஊரடங்கில் இருக்கும் இந்த காலத்தில், குழந்தைகளின் ஒரு சில ஒழுக்கநெறிகழும் மாறியுள்ளன. ஆகவே, குழந்தைகளுக்கு மீண்டும் அந்த ஒழுக்கநெறிகளைக் கற்றுக்கொடுத்தல் அவசியம். குறிப்பாக சீக்கிரம் உறங்கி சீக்கிரம் எழுதல் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை ஒழுக்கம் மட்டுமல்லாது ஆரோக்கியமும் கூட.. எனவே இப்போதிலிருந்தே உங்கள் பிள்ளைகளை அதற்கு தயார்படுத்துங்கள்!

 • திரைகளை அணைத்தல் :
  படுக்கைக்கு செல்வதற்கு முன் தொலைக்காட்சி, கைத்தொலைபேசி, மடிக்கணினி போன்ற அனைத்து இலத்திரனியல் திரைகளின் பயன்பாட்டையும் கட்டுப்படுத்துங்கள். குறைந்தது ஒரு மணி நேரமாவது அவர்கள் உறங்கச் செல்லும் முன் தொலைக்காட்சி பார்ப்பதை தவிருங்கள்.
 • உறக்கத்தை தூண்டுதல் :
  உறங்கும் முன்னரே உறங்குவதற்கு ஏற்ப அறையை தயார்படுத்துங்கள். அவர்களுக்கு உறக்கம் வரவில்லை என்றாலும் படுக்கை அறைக்குள் படுக்க வையுங்கள். அந்த சூழல் தானாக அவர்களுக்குத் தூக்கத்தை தூண்டும். அந்த அறையில் குறிப்பாக கைத்தொலைபேசி இருக்கக்கூடாது.
 • அறிவிப்பொலி (Alarm) :
  தினமும் சீக்கிரம் எழ குறிப்பிட்ட நேரத்தை குறித்து வைத்து அறிவிப்பொலியை தயார் செய்யுங்கள். அந்த நேரத்தில் தினமும் பிள்ளைகளை எழுப்பி விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்ய அதுவே அவர்களுக்கு தினசரி எழும் நேரமாக மாறிவிடும்.
 • காலை உணவு :
  காலை உணவை சிறப்பாக செய்து கொடுங்கள். அது ஆரோக்கியமான உணவாகவும் இருக்க வேண்டும். அதுவே அவர்களை அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்கும்.
பகிர்ந்துகொள்ள